;
Athirady Tamil News

பல்வேறு விபத்துக்களில் நால்வர் பலி..!!

0

பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (06) இரவு சிறிய லொறி ஒன்று மோதியதில் 37 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய தரங்க ஹேரத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) இரவு 7.50 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபரை எதிரில் வந்த லொறி ஒன்றி மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கஸ் சந்தியில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவரை தனியார் பேருந்து ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஹம்பாந்தோட்டை, பதகிரிய பசகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 1 =

*