;
Athirady Tamil News

ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி..!!

0

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி குயில். இவர்களுக்கு பாரதி (வயது 11) என்ற மகனும் பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

பாரதி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குயிலி நடுவலூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு தனது குழந்தைகளை அழைத்து சென்றார். அங்கு பாரதி சிறுவர்களுடன் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த தோட்டத்தின் உரிமையாளர்கள் இங்கு விளையாடக்கூடாது என்று கூறி சிறுவர்களை விரட்டினார்கள். இதனால் அவர்கள் பயந்து ஓடியபோது அருகில் இருந்த கிணற்றில் பாரதி தவறி விழுந்தார்.

இதுகுறித்து மற்ற சிறுவர்கள் பாரதியின் தாயாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக குயிலி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்த போது பாரதி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி பாரதியின் உடலை மீட்டனர். அப்போது குயிலி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந் தது.

இதுகுறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாரதியின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*