;
Athirady Tamil News

கைக்குழந்தையுடன் தாய் செய்த வேலை: அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்..!!

0

அமெரிக்காவில் தாய் ஒருவர் கைக்குழந்தையை பற்றி சிறிதும் கவலையின்றி சாலையில் விபத்து ஏற்படுத்தும் வீடியோ காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் Texas மாகாணத்தை சேர்ந்த Caitlyn Rodriguez என்ற 29 வயது பெண் கடந்த ஜூன் 15-ம் திகதியன்று 100கி.மீற்றர் வேகத்தில் சாலையில் சென்றுள்ளார்.

வேகத்தை குறைக்குமாறு பொலிஸார் எச்சரித்தும் கூட, அவர் வேகத்தை குறைக்காமல் சென்றுள்ளார்.இதனால் கார் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது

ஒரு கட்டத்தில் முழுவதும் கட்டுப்பாட்டை இழந்த கார், மற்றொரு காரின் மீது மோதி நின்றது. உடனே காரில் இருந்து வெளியில் வந்த பெண், பின்பக்கத்தில் இருந்த தன்னுடைய கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தார்

சிறிது தூரம் சென்ற அவர், மற்றொரு காரை மறித்து, அதிலிருந்த பெண் மற்றும் சிறுவர்களை மிரட்டி காரை திருட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் விரைந்து வந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட பெண்ணை கைது செய்து, குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.

காரை திருட முயற்சித்தல் மற்றும் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஒட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் Caitlyn-ஐ சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் கார் ஒட்டிய வீடியோ காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்

https://adclick.g.doubleclick.net/pcs/click?xai=AKAOjssaG_PP-Y72rhFE0coYZ3QEKszyEg3nGcHPp4ezxK_FzBHsJyKOILErSnKt9BH_RqCgTy1-gbTy0oOHHOGU8Okrgp88YuTY0rcADzUYvsyPRTimzbzUh1ZunuQ6X64gEcdHQx9roA&sai=AMfl-YQ7PsF_P6i7MvtBgTj9lYrWNICjXT-mXwIkibDE2c2bMhsQSJ1mnIfJ-YP8ZKhIGNCMZC6-bcDWH1w_QmZ2MZdCV1hXCAJUghg4uXUXgPwV&sig=Cg0ArKJSzKSbxNum6AhiEAE&urlfix=1&adurl=https://www.visa.com.lk/pay-with-visa/featured-technologies/visa-paywave.html%3Fdclid%3DCjkKEQjww8jcBRDfzNWv6vv9gPwBEiQAQyQ-u1B8-6iu6eRQ7Pfj4OuV-69BRaXz_oYyAchf0HPnW_fw_wcB

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*