;
Athirady Tamil News

வவுனியா நொச்சிமோட்டையில் புனரமைப்பிற்கு உதவி வழங்கிய சிறிரெலோ இளைஞரணி..!! (படங்கள்)

0

வவுனியாவில் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணியினர் கோவில் புனரமைப்பிற்கான உதவிகள் வழங்கிவைப்பு
வவுனியா நொச்சிமோட்டை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலானது 58வருட பழைமைவாய்ந்த கோவிலாகும் குறித்த கிராமத்தில் ஏற்பட்ட இடப்பெயர்விற்கு பின் இன்னமும் இக்கோவில் புனர்நிர்மாணிக்கப்படாது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது

எனவே இக்கிராம நலன்புரிச்சங்கத்தினர் சிறிரெலோ இளைஞரணியினரிடம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கினங்க சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் பணிப்பின் பெயரில் கோவிலின் தற்காலிக புனரமைப்பிற்கான கட்டிட நிர்மாணப் பொருட்கள் இன்று(07.09.2018) காலை 11மணியளவில் கிராம நலன்புரிச்சங்கத்தினரிடம் சிறிரெலோ இளைஞரணியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் குறித்த கோவிலின் புனர்நிர்மானத்திற்கு உதவியளிப்பதாகவும் இளைஞரனியினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது

1985ல் கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இலங்கை இராணுவத்துடன் ஏற்பட்ட யுத்ததில் களமாடி வீரமரணமடைந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் போராளி அமரர் பவா(கந்தையா ரவீந்திரன்) அவர்களின் நிணைவாக கனடாவில் உள்ள அவரது சகோதரர் கந்தையா சிவா அவர்கள் நிர்மானப்பொருட்களுக்கான நிதியுதவியை சிறிரெலோ இளைஞரணிக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 15 =

*