;
Athirady Tamil News

யாழில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி கைது..!!

0

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடு உடைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான ஆவா குழுவின் எதிரணி இளைஞர் ஒருவரை இன்று (07) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த கணேஜி என்ற இளைஞரே யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவா குழுவுடன் செயற்பட்ட இந்த நபர், கடந்த பல காலங்களாக ஆவா குழுவில் இருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

பல காலமாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த இந்த இளைஞர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, யாழ். நகர் பகுதியில் வைத்து யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 3 =

*