;
Athirady Tamil News

என்ன உலகம்டா இது .,ஓடும் ரயிலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்.!!!

0

ஓடும் ரயிலில் நின்றபடியே தன் குழந்தைக்கு பாலூட்டிய தாய்க்கு அந்த ரயிலில் பயணிகள் எவரும் உட்கார இடம் தர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த கேதே ஹிட்சேன்ஸ் என்ற பெண் ஸ்ட்ராட்ஃபோர்டுலிருந்து விக்ஃபோர்டு என்ற பகுதியை நோக்கி ரயிலில் பயணம் செய்துள்ளார். மேலும் தனது கைக்குழந்தையுடன் 30 நிமிடங்களுக்கு மேலாக நின்று கொண்டே சென்றுள்ளார்.

அப்பொழுது குழந்தை பசியால் அழுதுள்ளது.எனவே நின்றபடியே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இதனை அமர்ந்து பயணம் செய்த பயணிகள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் நின்றுகொண்டே குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்க்கு மனிதாபிமானத்துடன் அமர இடம் தர மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, மன உளைச்சல் அடைந்த அந்தபெண் தன் குழந்தைக்கு நின்று கொண்டே பாலூட்டிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததோடு தனது கோபத்தையும் கொட்டி தீர்த்துள்ளார்.

அந்த பெண் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது..!

கூட்டம் நிரம்பிய பயணிகள் ரயிலில், லண்டனில் இருந்து என் வீட்டிற்குச் சென்றபோது தான் இந்த சம்பவத்தினை நான் சந்திக்க நேர்ந்தது. 6 மாதமே ஆன குழந்தைக்கு அவரது தாய் மிகவும் கஷ்டப்பட்டு நின்றபடியே பாலூட்டி வந்தபோது சுமார் 30 நிமிடங்கள் மற்றும் 3 நிறுத்தங்களை சந்தித்தும் ஒருவரும் எழுந்து அந்த தாய்க்கு அமர இடமளிக்க முன்வராத உலகம் இது .

மேலும் அப்பொழுது இருக்கையில் அமர்ந்திருந்த பலரும் என்னைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டனர். ஒரு பெண்மனி என்னைப் பார்த்து சிறு புன்னகை மட்டுமே அளித்தால், ‘சிரிப்பை நிறுத்திவிட்டு உனது சீட்டை தருகிறாயா?’ என்று எனது மனத்துக்குள் கேள்வி எழுந்து மறைந்தது.

அப்போது அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு பெண், தன் புத்தகத்தின் மீது இருந்த பார்வையினை தன் பக்கம் திருப்பினாள், உடனடியாக தனது இடத்தை எனக்கு அளிக்க எழுந்தாள். ஆனால் அப்போது மற்றொரு பெண் அவரை மீறி விடைப்பெற்ற இடத்தினை அடைய முற்பட்டார் .

எனக்கு இடமளிக்க முன்வந்த பெண், தான் இந்த இடத்தை நின்றபடி குழந்தைக்கு பாலூட்டும் இந்த தாய்-க்கு அளிக்க விரும்பினேன் என குரல் கொடுத்தார். ஆனால் இவரது குரலுக்கு செவி சாய்க்காத அந்த பெண்மணி தனது மொபைலின் இயர் போன்களை காதில் சொருகி மற்றொரு உலகிற்கு பறந்தாள்.

யாருக்கு தெரியும், ஒருவேலை அந்த பெண் சமீபத்தில் கருவுற்று இருக்கலாம். ஒருவேலை அலுவலகத்தில் இருந்து பல சுமைகளுடன் களைப்பாக வந்திருக்கலாம், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம், இல்லையேல் சொல்வதற்கு இயலாத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் அப்படி இருந்துவிடாதீர்…

எவ்வாறு இருப்பினும் அடுத்த முறை ரயில் பயணத்தில் கைக்குழந்தையுடன் வரும் ஒரு தாயினை கண்டால் அவருக்கு இடமளிக்க முன்வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*