;
Athirady Tamil News

சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட பிரித்தானிய இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

0

இங்கிலாந்தில் வீட்டின் சுவற்றில் சிறுநீர் கழித்த நபரை தட்டிக் கேட்டதால், அப்பாவி இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தின் Manchester பகுதியை சேர்ந்தவர் Jake Schofield (21). கால் சென்டரில் பணியாற்றி வரும் Jake கடந்த சனிக்கிழமையன்று தன்னுடைய சகோதரன் நாதன் (27) மற்றும் நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது ஒரு பெண்ணும், ஆணும் வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழிப்பதை பார்த்து, அவர்களை நாதன் தடுத்தி நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 40 வயதுள்ள மர்ம நபர், நாதன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்

இதில் தாக்குபிடிக்க முடியாமல் நாதன் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். அதேசமயம் அவருடைய நண்பரின் முகத்தில் ஓங்கி குத்தியதால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

இதில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த Jake -ஐயும் அந்த கொடூரன் விட்டு வைக்கவில்லை. விடாமல் நீண்ட நேரமாக Jake தலைப்பகுதியில் அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளான்.

இதில் மண்டை உடைந்து அதிக ரத்தம் வெளியேற, Jake சுயநினைவிழந்து அங்கிருந்த நீச்சல் தொட்டியில் மயங்கி விழுந்தான்

பின்னர் உடனடியாக மர்ம நபர்கள் இரண்டு பேருமே அங்கிருந்து காரில் தப்பியோடினர். இதற்கிடையில் சத்தம் கேட்டு எட்டி பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், ரத்த வெள்ளத்தில் Jake கிடப்பதை பார்த்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், Jake-ஐ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்போது Jake தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிசிச்சை பெற்று வருகிறார்.இதுகு

றித்து Jake சகோதரி Zoe (25), என்னுடைய சகோதரர்கள் இருவருமே மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள். யாருடனும் சண்டைக்கு எல்லாம் செல்ல மாட்டார்கள். சுயநினைவின்றி Jake கிடப்பதை பார்த்து நானும் என்னுடைய தாயும் அழுது புலம்பி விட்டோம். அவன் பிழைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளேன். பொலிஸாரும் குற்றவாளிகள் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + seven =

*