;
Athirady Tamil News

காதலியிடம் காதலை கூற ஆசையுடன் சென்ற காதலனுக்கு நேர்ந்த சோகம்..!!

0

பிரித்தானியாவில் காதலியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த சென்ற காதலன் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Phil Ewins (31) என்ற தன்னுடைய காதல் மனைவியை எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பதை பற்றிய குறிப்பு ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னுடைய காதலை கூறுவதற்காக ஆசையாக காரில் சென்று கொண்டிருந்தேன்

பர்மிங்காம் பகுதியில் உள்ள Golden Hillock சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, பயங்கரமான விபத்து ஏற்பட்டது. அதில், 10 அடி நீளமுள்ள உலோகம் என் நெஞ்சுப்பகுதியில் பாய்ந்தது. என்னால் அசைய கூட முடியவில்லை. அதேசமயம் வலியும் அதிகமாக இருந்தது

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், செயற்கை சுவாசம் பொருத்தி, பொறுமையாக உலோகத்தை துண்டாக்கினர்.

பின்னர் அந்த இடத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி Queen Elizabeth மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எனக்கு 2 அறுவை சிகிசிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் நான் கோமா நிலைக்கு தள்ளப்பட்டேன்

3 வாரங்களுக்கு பின்னர் என்னுடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, நான் மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தங்களுடைய முதல் டேட்டிங்கை உற்சாகமாக கொண்டாடி வரும் Phil Ewins – Dr Dikla தம்பதியினர், சிறப்பாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Ewins கடந்த ஜூலை மாதத்தில் நடந்த தன்னுடைய திருமணத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படை வீரர்கள் கூறுகையில், இதை போன்ற ஒரு சம்பவத்தை இதற்கு முன்னதாகா நாங்கள் பார்த்ததே இல்லை என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*