இந்தியா – இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியை காண வந்த விஜய் மல்லையா..!!

இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வருகை தந்து போட்டியை நேரில் கண்டு களித்தார்.
மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் அடிப்படையில் மும்பை கோர்ட்டிலும் அவர் மீது நடக்கும் வழக்கில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.