;
Athirady Tamil News

பொலிஸ் ஆணையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு 88,000 ரூபா அபராதம்..!!

0

செவனகல பிரதேசத்தில் வைத்து மூன்று மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரின் ஆணையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் 88 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்துள்ளது.

21 வயது இளைஞர் ஒருவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த குற்றச்சாட்டு தெமாடர்பில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கைதுசெய்யபப்பட்ட சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, இடம்பெற்ற விசாரணைகளின்போது, சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளின் இலக்க தகட்டையும் மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 9 குற்றச்சாட்டுக்களின் கீழ், எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு 88 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*