;
Athirady Tamil News

காஷ்மீரில் ஹுரியத் செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை..!!

0

இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தனியாக பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் 26 அரசியல், மதவாத அமைப்புகள் ஒன்றிணைந்து ஹுரியத் மாநாடு என்னும் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹக்கீம் உர் ரெஹ்மான் சுல்தானி. ஹுரியத் மாநாடு இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்து வந்தார். இந்நிலையில் சோபோர் நகரின் அருகிலுள்ள போம்பாய் சோபோர் என்னும் இடத்தில் இன்று அடையாளம் தெரியாக மர்மநபர்கள் ஹக்கீமை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாரமுல்லா மாவட்ட போலீசார் கொலையாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*