;
Athirady Tamil News

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது..!!

0

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 04 தொலைபேசிகளும், இரண்டு தொலைக் காட்சிகள், தங்க மாலைகள் அடகு வைக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்கள் உட்பட பிளாஸ்டிக் பிஸ்டோல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் றத்மலானை, மொரட்டுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*