;
Athirady Tamil News

இலவச பொருளால் நடுத்தெருவில் மயங்கி கிடந்த தாய்: கதறி அழுத பச்சிளங்குழந்தை..!!

0

அயர்லாந்தில் அறிமுகம் இல்லாத ஒரு நபர் கொடுத்த சிகரெட்டை பிடித்ததால் சம்பவ இடத்திலேயே தாய் மயங்கி கிடக்க அருகில் பச்சிளங்குழந்தை கதறி அழுதுகொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அயர்லாந்து நாட்டை சேர்ந்த Ciara Tynan என்ற 30 வயதான பெண், Dublin நகர சாலையில் மயங்கிய நிலையில் கிடக்க, மறுபக்கம் பெண் குழந்தை ஒன்று கதறி அழுதுகொண்டிருந்துள்ளது.இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தன்னுடைய மகளுடன் Ciara-வை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட போது, Ciara அதிகளவிலான் போதை மருந்து எடுத்திருப்பது தெரியவந்தது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த Ciara நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.அன்றைய தினம் என்னுடைய குழந்தையுடன் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன். என்னுடைய கணவர் எனக்கு போன் செய்தார். அதற்கு இன்னும் 5 நிமிடத்தில் பேருந்து வந்துவிடும், நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் என பதிலளித்திருந்தேன்

அதற்குள் அங்கு வந்த ஒரு நபர் எனக்கு இலவசமாக சிகரெட் கொடுத்தார். யாரிடமும் கடன் வாங்கி எனக்கு பழக்கமில்லை. ஆனால் அது இலவசமாக தானே கிடைக்கிறது என நினைத்து வாங்கினேன். அதனை பிடித்து கொண்டிருக்கும்போதே பேருந்து நெருங்கி வந்துவிட்டது. உடனே அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்தேன்

அப்பொழுது தான் நான் உணர்ந்தேன், என்னுடைய உடல் முழுவதும், சிறிது சிறிதாக உணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறது என்பதை. அதேசமயம் அருகாமையில் என்னுடைய குழந்தையும் அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையிலே இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் அனுபவித்ததே இல்லை. இதுஒரு மோசமான சம்பவம் என விளக்கியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + six =

*