;
Athirady Tamil News

லண்டன் நடுவே 100 அடி உயரத்தில் தொங்கிய நபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

0

லண்டன் Tube station பகுதியில் 100 அடி உயர கிரேனில், யாரோ ஒரு மர்ம நபர் அந்தரத்தில் தொங்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் Tube station பகுதியில் உள்ள 100 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட கிரேன் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்களில் சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். காண்போர் நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ சில நிமிடங்களில் இணையம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த வீடியோவை பதிவிட்டவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா? எங்களுக்கு தெரியாது என பதிவிட்டிருந்தார்.

மற்றொருவர், இந்த வீடியோ குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அந்தரத்தில் காற்றில் போராடிக்கொண்டிருந்தார் என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பு கூறுகையில், அந்த கிரேனின் உச்சியிலிருந்து புகைப்படம் எடுத்தல் கழுகுப்பார்வையில் எடுத்தவை போல புகைப்படங்கள் வரும். அந்த ஆசையில் புகைப்பட கலைஞர் ஒருவர் தான் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என விளக்கம் கொடுத்துள்ளனர்

blob:https://www.thesun.co.uk/7352e52e-c069-490d-8511-1d98a88dbc81

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*