;
Athirady Tamil News

ஏழாலையில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்..!! (படங்கள்)

0

ஏழாலையில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 1.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட உள்ள ஏழாலை கிழக்கு இசிதோர் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 09.08.2018 ஞயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் ஏழாலை கிழக்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு முன்பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். மாகாணசபை உறுப்பினருடன் பிரதேச பங்குத்தந்தை, முன்பள்ளி நிர்வாகிகள் ஆகியோரும் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், பங்குத்தந்தை,முன்பள்ளிச்சிறார்கள், பிரதேச கிராம சேவையாளர் அ.அகிலன், மற்றும் பொதுமக்கள், சிறார்களின் பெற்றோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − three =

*