;
Athirady Tamil News

வனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம் நீடிக்கபட்டுள்ளது..!!

0

வனவளதிணைக்களத்தால் எல்லை போடப்பட்ட பொது மக்களின் காணிகளிற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்தற்கான காலம்நீடிக்கபட்டுள்ளதாக அறிவிப்பு!!

வவுனியாவில் யுத்தபாதிப்புகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது காணிகளுக்குள் வரும் பொழுது அக்காணிகளில் வனவள திணைக்களத்தினரால் எல்லைபோடப்பட்டிருக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே இது தொடர்பாக கடந்த பல வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்கள்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதன் விளைவாக மக்கள் தமது வாழ்விடங்களிற்காக அல்லது வாழ்வாதாரமாக பயன்படுத்தப்பட்ட காணிகள் இருப்பின் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இருந்தால் கடந்த எட்டாம் மாதம் 3 ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பான தகவல்களை அப்பகுதி பிரதேசசெயலகங்களுக்கு வழங்குமாறு கோரப்பட்ட்டிருந்தது.

அதன்படி பலர் பிரதேச்செயலகங்களில் அதற்கானஆதாரங்களை சமர்பித்திருந்தனர். எனினும் எதிர்பார்த்தஅளவு விண்ணப்பங்கள் கிடக்கபெறாமையாலும், மக்களுக்கு குறித்ததகவல் சரியானமுறையில் போய்சேராமையினாலும் மீண்டும் அதற்கானகால நீடிப்பு வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புகுழுவால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இடம்பெயர்ந்தமக்களது பூர்விக்காணிகளில் வனவளதிணைக்களம் எல்லைபோடும் செயற்பாடுகள்நடைபெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை எதிர்வரும் பத்தாம் மாதம் 3 ம் திகதிக்குமுன்னர் அப்பகுதிக்குரிய பிரதேச்செயலகங்களில் சமர்பிக்குமாறு மாவட்டஒருங்கிணைப்பு குழுவால் பொதுமக்களிடம் வேண்டுகோள்விடப்படுகின்றது

காணிகளுக்கான ஆதாரங்களாக வீடமைத்திருந்தாலோ(சிதைவடைந்தவீடுகள்) அல்லது கிணறு, வான்பயிர்கள் போன்றவற்றை சுட்டிகாட்டியோ அல்லது அப்பகுதியின் கிராமஅபிவிருத்தி சங்கங்கள் , சமாதான நீதவான்கள் மூலமாகவோ அதனை உறுதிப்படுத்தி பிரதேசச்செயலாளரிடம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + ten =

*