பிரித்தானியாவில் இளம் ஜோடிக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! எத்தனை கோடி தெரியுமா?..!!

பிரித்தானியாவில் கணவனிடம் லாட்டரியில் பரிசு விழுந்துவிட்டதாக, முதலில் பொய் கூறிய பெண்ணுக்கு தற்போது 1 மில்லியன் பரிசு லாட்டரியில் விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.
பிரித்தானியாவின் Peterborough பகுதியைச் சேர்ந்த தம்பதி Daniel Peart(27)-Charlotte (28).
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் Charlotte தன் கணவர் Daniel Peart-யிடம் £250,000 லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக விளையாட்டிற்கு கூறியுள்ளார்
இதையடுத்து தற்போது உண்மையாகவே Charlotte-க்கு 1 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பு 9,22,81,680 கோடி ரூபாய்) EuroMillions HotPicks-ல் விழுந்துள்ளது.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த அவர் உடனடியாக கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் கணவரோ முன்னரே இது போன்று கூறி ஏமாற்றியுள்ளதால், அவர் நம்பவில்லை
அதன் பின் தன்னுடைய மொபைல் போனில் அதற்கான ஸ்கிரீன் ஸாட்டை எடுத்து அவருக்கு போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதைக் கண்ட பின்னர் அவர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இது குறித்து Charlotte கூறுகையில், நான் முதலில் இது குறித்து கூறிய போது என் கணவர் நம்பவில்லை, இன்றைய நாள் எப்போதும் போல் இருக்கும் நாள் கிடையாது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனால் இவர்கள் தங்களுக்கு விழுந்த பரிசுத் தொகையை வைத்து ஒரு பெரிய வீடு கட்டப்போகிறார்கள். அதில் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது