;
Athirady Tamil News

திருமணமான சில மணி நேரங்களில் உயிரிழந்த கணவன்: துடிதுடித்துப்போன மனைவி ..!!

0

பிரித்தானியாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலே கணவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Danny Emsley (37), தன்னுடைய 35 வயது காதலி கிளாராவை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று திருமணம் செய்துகொண்டார்.

Linton பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் , நண்பர்கள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

அன்றைய தினம் Danny திருமணம் முடிந்த பின்னர் இரவு 11.30 மணிக்கு, தனக்கு சோர்வாக இருப்பதால் அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் கிளாரா கீழே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர்

பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அறைக்கு சென்று பார்க்கும்பொழுது, Danny நலமுடன் இருப்பதாய் தெரிந்துகொண்டு மீண்டும் பார்ட்டியை கொண்டாட வந்துள்ளார்.

பின்னர் பார்ட்டி முடிந்து 1.30 மணிக்கு அறைக்கு சென்ற பொழுது, Danny இறந்த நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் கத்தியுள்ளார்

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் Danny உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சோக சம்பவம் குறித்து கிளாரா தன்னுடைய முகநூல் பக்கத்தில், வெள்ளிக்கிழமை தான் என் வாழ்நாளிலே மிகவும் மறக்க முடியாத நாள். நான் சந்தித்த மிகச் சிறந்த, நேர்மையான, வேடிக்கையான, சிறந்த மற்றும் அன்பான மனிதரை திருமணம் செய்து கொண்டேன்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒருவினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அன்பை வெளிபடுத்திய ஒரு நாள். ஆனால் அந்த நாளில் அப்படிப்பட்ட ஒரு செய்தியினை கேட்டிருக்க முடியாது. அந்த மாய இரவில் Danny என்னிடம் இருந்து அகற்றப்பட்டுவிட்டான்.

அதனால் என் இதயத்தில் ஏற்பட்ட துளையினை யாராலும் நிரப்ப முடியாது. என்னுடைய அற்புதமான கணவன் இல்லாமல் நான் எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fifteen =

*