;
Athirady Tamil News

நூதன முறையில் கணவரை கொலை செய்த மனைவி: அதிர்ச்சி காரணம்..!!

0

அமெரிக்காவில் பெண் ஒருவர் கண் சொட்டு மருந்தை உணவில் கலந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 52 வயதான லானா கிளேட்டன் என்ற பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் வட கரோலினாவில் உள்ள குடியிருப்பில் வைத்து திடீரென்று மயக்கமுற்று விழுந்துள்ளார் 64 வயதான ஸ்டீபன் கிளேட்டன்.

உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருக்கு அவரது மனைவியே தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவர் ஏற்கெனவே இறந்துள்ளதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. ஸ்டீபன் கிளேட்டன் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் லானா கிளேட்டனை விசாரித்ததில், அவர் தமது கணவரை விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு அளித்த உணவில் கண் சொட்டு மருத்தை கலந்து அளித்ததாகவும், எந்த சந்தேகமும் இன்றி ஸ்டீபன் உணவருந்தியதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.

இதனிடையே 2016 ஆம் ஆண்டு வில் அம்பு வைத்து கணவரை லானா கொலை செய்ய முயன்றதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்,அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை எனவும், தற்போது அந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − twelve =

*