;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!!

0

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த நபரை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ, கொக்கல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*