;
Athirady Tamil News

வவுனியா காஞ்சிரமோட்டை கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வன இலாகாவினர் தடைவிதித்துள்ளனர்..!!

0

வவுனியா காஞ்சிரமோட்டை கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வன இலாகாவினர் தடைவிதித்துள்ளனர்! வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்.

வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டை கிராமத்தில் மக்கள் தங்கள் பூர்வீக காணிகளில் மீள்குடியேறுவதற்கு வன இலகாவினர் தடை விதித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர்
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமமமானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய பூர்விகமான கிராமம் அது மட்டுமல்லாது அதன் அயல் கிராமங்களான காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை கிராமங்களில் 1977 ஆண்டு தென்னிலங்கையில் நடைபெற்ற வன்முறை காரணமாக இடம் பெயர்ந்த 300 தமிழ் குடும்பங்களை காந்தீயம் அமைப்பினர் குடியேற்றியிருந்தனர்.

1987 ஆம் ஆண்டு நாட்டின் வன்முறை காரணமாக சில கிராம மக்கள் காணாமல் போன சம்பவத்தையடுத்து, அக்கிராமங்களிலுள்ள மக்கள் அச்சம் காரணமாக உள்நாட்டிலும் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்திருந்தனர்.
இறுதி யுத்தம் முடிவடைந்து 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒன்பது குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஆறு குடும்பங்கள் வாழ முடியாத நிலமையில் கிராமத்தை விட்டு சென்றுவிட்டதன் பின்னர் மூன்று குடும்பங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் காட்டு மிருகங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர்ந்து வசித்து வந்தனர்.

அத்துடன் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 37 குடும்பங்கள் காஞ்சிரமோட்டை கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் வன இலாக திணைக்களம் அம்மக்களின் காணிகளை வன இலாகாவிற்கு சொந்தமானது என தெரிவித்து அவர்களுக்கான அனுமதியை வழங்க மறுத்து வருகிறார்கள்,
இதன் காரணமாக காஞ்சிராமோட்டையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மீள் குடியேறிய மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதுடன், அம்மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − fifteen =

*