;
Athirady Tamil News

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம்..!!

0

2019 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மக்களினதும் அறிஞர்களினதும் கருத்துக்களை கடந்த தினங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பெற்றுக்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் தற்போது ஆய்வு செய்து வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது குறித்த கருத்துக்களை கவனத்திற் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 6 =

*