;
Athirady Tamil News

லண்டனில் முக்கிய இடத்தைப் பெற்ற 2018 ஆம் ஆண்டு..!!

0

2018 ஆம் ஆண்டானது லண்டனின் வெப்பநிலை கூடிய கோடைகாலங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.அதிலும் இங்கிலாந்தில் இதுவரை நிலவியதிலும் இந்த வருடமே வெப்பநிலை கூடிய கோடைகாலமாகும்.

1910 தொடக்கம் மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவுகளின்படி, இப்பட்டியலில் 1976, 2003 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளுடன் தற்போது 2018 ஆம் ஆண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நான்கு ஆண்டுகளிலும் சராசரி வெப்பநிலையாக 15.8C (60.4F பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது நீண்டகாலங்களை கருதும்போது ஏற்படும் சராசரி வெப்பநிலையிலும் 1.5C அதிகமாகும்.

ஆனாலும் இந்நான்கு வருட வெப்பநிலைகளுக்குமிடையில் மிகச்சிறிய வித்தியாசமே காணப்படுவதால் அவற்றை வேறுபடுத்துவது கடினம் என்கின்றனர் வானியளாளர்கள்.

அதேநேரம் இங்கிலாந்தின் சராசரி வெப்பநிலை 17.2C (63F), இது 1976 இல் 17C ஆகக் காணப்பட்டிருந்தது.இவ் வெப்பஅலைகளின் அதிகரிப்பு புவி வெப்பமாதல் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − one =

*