;
Athirady Tamil News

விமான பயணிகளுக்கு பிரித்தானிய அரசு விடுத்த எச்சரிக்கை..!!

0

ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் அல்லது அடிக்கடி வந்து செல்லும் பிரித்தானியர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து துபாய் சென்ற பிரித்தானிய தாயார் ஒருவர் விமான பயணத்தினிடையே மது அருந்தியதால், அவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அடுத்தே பிரித்தானிய தூதரகம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் உள்ளூர் பழக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், உரிய அனுமதி பெற்று மது அருந்துவோர் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்தில் சுற்றுலாபயணிகளுக்கு மது அருந்த அனுமதி இல்லை எனவும், பொதுவெளியில் மது அருந்துவது குற்றச்செயலாகும் எனவும் பிரித்தானிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் குடியிருக்கும் ஸ்வீடன் மற்றும் ஈரானிய குடியுரிமை கொண்ட மருத்துவர் Ellie Holman என்பவர் லண்டனில் இருந்து துபாய் செல்லும் விமான பயணத்தினிடையே மது அருந்தியதை கண்டறிந்ததால் அவர் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் சிறை வாசம் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 1 =

*