;
Athirady Tamil News

வவுனியா பாரதியார் நினைவு தினத்தில் தமிழ் அறிஞர் புறக்கணிப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் 97ஆவது நினைவு தினத்தில் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் அறிஞருக்கு முக்கியத்துவம் வழங்கி வவுனியாவிலுள்ள தமிழ் அறிஞர் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மகாகவி பாரதியாரின் நினைவு இடத்தில் அவரது 97ஆவது நினைவு தினம் இன்று காலை 8.30மணியளவில் தமிழ் மாமன்ற மேற்சபை உறுப்பினர் இ.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியாவில் நீண்டகாலமாக சமூக ஆர்வலர் ஒருவர் கவிஞர்கள், அறிஞர்களின் சிலைகளுக்கு விழா எடுப்பதுடன் அதனைப்புனரமைப்புச் செய்து பலரின் அனுசரனையில் நினைவு தினங்களை அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாகவி பாரதியாரின் நினைவு தின ஏற்பாடுகளையும் இன்று மேற்கொண்டதுடன் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவரும் தமிழ் அறிஞருமான தமிழ்மணி அகளங்கனை அழைத்துக்கொண்டு மகாகவி பாரதியாரின் நினைவுப் பேருரையினை நிகழ்த்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டபோது வவுனியாவிலுள்ள தமிழ் அறிஞரை புறக்கணிப்புச் செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழ் அறிஞருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அவரின் பேருரை நிகழ்த்தப்பட்ட சம்பவம் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் குழுமியிருந்த பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இறுதிவரையிலும் தமிழ்மணி அகளங்கனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

கடந்த 6 வருடங்களாக வவுனியாவிலுள்ள பெரியார்களின் நினைவுப் பெருரையினை வவுனியாவிலுள்ள தமிழ் அறிஞர்களே நிகழ்த்தி வந்துள்ள நிலையில் இன்று தென்னிந்தியாவிலிருந்து ஏற்பாட்டுக்குழுவினரால் நிகழ்விற்கு அழைத்துவரப்பட்டு இங்குள்ள தமிழ் அறிஞர்களை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + six =

*