;
Athirady Tamil News

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம்..!!

0

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வில் மாட்டிறைச்சி கடைகளை தடைத் தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே நிலாம் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மாட்டிறைச்சியை முஸ்லிம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும் அறிவர்.யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான இறைச்சிக் கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லிம் மக்களாகும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இறைச்சிக் கடைகளை மூட எத்தனிப்பது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது.யாழ்ப்பாண முஸ்லிம்கள் போரின் பின்னர் மீள்குடியமர்ந்து தற்போது சுமூக வாழ்வை தொடர்கின்றனர்.ஆனால் இந்த நடவடிக்கை அவர்களது தொழிலுரிமையை பாதிக்கின்றது.அவர்களின் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கின்றது.

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது .
யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான மாட்டிறைச்சி கடைகளில் 20 கடைகளை முஸ்லிகளே நடாத்தி வருகின்றனர் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + one =

*