பாரம்பரிய சித்த மருத்துவம் மறைந்து செல்கின்றது: குணசீலன்..!! (படங்கள்)
பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றது என வட.மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறிப்பிட்டுள்ளார்.
வட.மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்த மருத்துவத்தின் மகத்தும் தொடர்பாக ‘அகத்தியன் அவிழ்தம்’ ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதன் வெளியீடு மற்றும் பாராட்டு நிகழ்வு நேற்று யாழ். பொது நூலகக் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து மறைந்து கொண்டிருப்பதோடு, பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்தும் மற்றும் தூய்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து செல்லுகின்றது எனக் குறிப்பிட்டார்.
எனவே அவற்றைக் கட்டிக் காக்க அனைவரும் முன் வர வேண்டும் எனவும், சித்த மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் குணசீலன் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.