;
Athirady Tamil News

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்குப் பொலிஸாரே காரணம்: சிறீதரன்..!!

0

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் பொலிஸாரே இருந்து வருகிறார்கள் என நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின் காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கின்றார்கள்.

முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிஸாரை இடைத்தரகர்களாக வைத்து நீதிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.

புனர்வாழ்வு பெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*