;
Athirady Tamil News

கிறாஸ்ஹொப்பர்ஸ் அணிக்கு விளையாட்டுச்சீருடைகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

கிறாஸ்ஹொப்பர்ஸ் அணிக்கு விளையாட்டுச்சீருடைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்

தெல்லிப்பழை, கிறாஸ்ஹொப்பர்ஸ் கிரிக்கட் அணிக்கான விளையாட்டுச்சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 14.09.2018 வெள்ளிக்கிழமை பி.ப 01 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் சிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் கீழ் ரூ. 75,000/= பெறுமதியான மேற்படி உதவிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

மேற்படி நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், விளையாடுக்கழக நிர்வாகிகள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eleven =

*