;
Athirady Tamil News

பங்குச்சந்தை மோசடி வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் 2 மகன்கள் கைது..!!

0

எகிப்து நாட்டில் அதிபர், பிரதமர் உள்பட பல முக்கிய பதவிகளில் இருந்த ஹோஸ்னி முபாரக் தற்போது வயோதிகம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் இரண்டு மகன்களாக அலா, கமால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எகிப்து பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் பவுண்ட் வரை இருவரும் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 2 =

*