;
Athirady Tamil News

இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ போர் பயிற்சி உத்தரகாண்டில் தொடங்கியது..!!

0

உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள சௌபாட்டியா எனும் இடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பங்கேற்கும் வருடாந்திர கூட்டு ராணுவ போர் பயிற்சி தொடங்கியுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த தலா இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு இரு தரப்பு வீரர்களும் ராணுவ முறைப்படி சல்யூட் அடித்து போர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

அமெரிக்க ராணுவத்தின் முதல் நிலை படைப்பிரிவு உள்ளிட்ட 4 படைபிரிவுகளும், இந்திய ராணுவத்தின் கருடா படைப்பிரிவு, சூர்யா படைப்பிரிவு என மொத்தம் 4 படைபிரிவுகளும் யுத் அபியாஸ் 2018 என பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பை சேர்ந்த நவீன தொலைத்தொடர்பு கருவிகள், கண்காணிப்பு கருவிகள், வெடிகுண்டுகளை கண்டறிம் கருவிகள் போன்றவை பயிற்சியின் போது பயன்படுத்தப்பட உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் இடங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் கூட்டு பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர்.

மேலும், இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள இந்த போர் பயிற்சியில் இரண்டு ராணுவங்களிலும் உள்ள நிபுணர்கள், அவர்களின் அனுபவங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + twelve =

*