;
Athirady Tamil News

பிறந்தநாள் கொண்டாட நாளை வாரணாசி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!!

0

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (17-ம் தேதி) 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் நாளை உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.

தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள பாரா லால்பூரில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

18-ம் தேதி வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் அன்றிரவு டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*