;
Athirady Tamil News

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தேசிய தினம் ஜனாதிபதி தலைமையில்..!! (படங்கள்)

0

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர தூய்மைப்படுத்தல் தேசிய வைபவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் காலி தடல்ல கடற்கரையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர தூய்மைப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களின் பாதுகாப்பு வாரமும் இதனோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான கரையோரப் பாதுகாப்பு வாரத்தில் கடற்கரைகள் மற்றும் கடல்சார் சூழலை தூய்மைப்படுத்தும் சுமார் 100 செயற்திட்டங்கள் நாட்டை சூழவுள்ள 14 கரையோர மாவட்டங்களில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*