;
Athirady Tamil News

‘வெளிச்சம்” குறும்படம் வெளியீடு..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு மையத் தலைவர் திரு. அருந்தவபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் குறும்படத்திற்கான ஆய்வுரையை எதிரொலி பத்திரிகை ஆசிரியர் திரு. பிரபாகரன் நிகழ்த்தினார். குருக்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என நூற்றுக்கும் அதிகமானேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரா நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்தது.

போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த நடிகைக்கான விருதும் இந்திரைப்படத்திற்கு கிடைத்தமை மிக முக்கியமான அம்சம் ஆகும்

நடிகர்கள்
A.s.றொக்சன்
K.m.செமில்டா
நளினி கிறேசியன்
A.எமிலியன்ஸ்
S.சோபிகா
A.ஜொய்லி
A.j.கெனடி
M.டெலக்சன்
N.ரமேஸ்
குழந்தை நட்சத்திரம்-P.கிறேசியா

ஒப்பனை
வி.தனுசன்
எ.சுரேந்த்

இசை
Fr.M.றெக்ஸ்

கதை இயக்கம்
சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியம்

ஒளிப்பதிவு/எடிட்டிங்
(Joy & Roy Digital studio)
S.Roy selestine (roy)
S.Suntharam (siva)
S.Varothayan (varo)
M.Dino sabesan (Dino)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*