;
Athirady Tamil News

அங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!!

0

அங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவிஸ்ஸாவளை வீதியில் இன்று மாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னிணைப்பு – பி.ப. 4.45

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுடைய ராஜகிரிய, கலபழுவாவ பிரதேசத்தைச் ​சேர்ந்த தாரக இரோசன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 12 =

*