;
Athirady Tamil News

இடுக்கி அருகே பிரசவ வார்டுக்குள் பர்தாவுடன் சுற்றி திரிந்த போலீஸ் அதிகாரி கைது..!!

0

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா குளமாவு போலீஸ் நிலையத்தில் சீனியர் சிவில் போலீஸ் அதிகாரியாக உள்ளவர் நூர் சமீர். இவரது நண்பர் பிலால்.

இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தொடுபுழா ஏலலூரில் உள்ள தனியார் ஆஸ்பதிரிக்கு பர்தா அணிந்து சென்றனர். பிரசவ வார்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் சுற்றித்திரிந்தனர். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர் ஒருவர் அருகில் வந்து பார்த்தபோது போலீஸ் அதிகாரியை அடையாளம் கண்டு கொண்டார்.

பிரசவ வார்ட்டில் அத்துமீறி பர்தாவுடன் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் உள்ளே நுழைந்தது குறித்து அந்த ஊழியர் குளமாவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி நூர் சமீர் மற்றும் அவரது நண்பர் பிலாலும் தப்பி ஓடினர்.

இது குறித்து குளமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸ் அதிகாரி பணிபுரியும் அதே போலீஸ் நிலையத்தில் நூர் சமீர் சரணடைந்தார். பிரசவ வார்டுக்குள் பர்தா அணிந்து சென்றது நானும், எனது நண்பர் பிலாலும் தான். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன் என்று கூறி சரணடைந்தார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய பிலாலை தேடி வருகிறார்கள். பிரசவ வார்டுக்குள் பர்தா அணிந்து ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என்று குளமாவு போலீசார் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − nine =

*