;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி யாழில் தேசிய ரீதியில் முதலிடம்..!!

0

வெளியாகியுள்ள ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 198 புள்ளிகளை பெற்று யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனான மனோகரன் திகழொளிபவன் எனும் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழிமூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் விசேட அக்கறையுடன் தமக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இம்மாணவன் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் நவாஸ்கன் நதி எனும் மாணவியும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழிமூலம் முதல் இடத்தையும் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த இந்த மாணவி எதிர்காலத்தில் தான் ஒரு மருத்துவ நிபுணர் ஆக விரும்புவதாக குறிப்பிட்டதுடன் தமது பெற்றோர் அதிபர் ஆசிரியர் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இம்மாணவி தொடர்பில் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபரான நடேசலிங்கம் மற்றும் மாணவியின் பெற்றோர் ஆசிரியர்கள் ஆகியோர் தமது மகிழ்ச்சிகளை இவ்வாறு தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 10 =

*