;
Athirady Tamil News

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!!

0

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டாக்காவில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இந்தியா அணி துடுப்பாட்டம் செய்ய தேர்வு செய்தது.

அதன்படி முதலில் கலமிறங்கிய யாஷவி ஜெய்ஸ்வால் 85 ஓட்டங்களை, அனுஜ் ராவத் 57 ஓட்டங்களையும் பெற்று நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதன்பின் வந்த தலைவர் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 305 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள்.

ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த, இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இலங்கை அணியில் பெர்னாண்டோ 49 ஓட்டங்களும், பரனவிதான 48 ஓட்டங்களும், சூரியபண்டார 31 ஓட்டங்களும் சேர்த்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 9 =

*