;
Athirady Tamil News

யானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர் – வீடியோ..!!

0

அசாம் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத் து தனது தொகுதியான ராதாபரி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒரு கிராமத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு இடத்தில் யானை நின்றுவிட்டது. பின்னர் திடீரென தன் உடலைக் குலுக்கியபடி நகரத் தொடங்கியது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த கிரிபாநாத் மல்லா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

உடனே அவரது ஆதரவாளர்கள் ஓடி வந்து அவரை தூக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். யானையின் பக்கவாட்டில் விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். யானை மீதிருந்து அவர் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − seven =

*