;
Athirady Tamil News

கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது..!! (படங்கள்)

0

கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது . கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில் காணப்படும் குறிதத் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 08.09.2018 அன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலை விசமிகளால் எடுத்த செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டிருக்கவில்லை எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் அதிர்ப்பி அடைந்த ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆலயத்தில் சட்டவிரோத மற்றம் சமூகத்திற்கு ஒவ்வாத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்கனவே பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்கள் இடம்பெறாது ஆலயத்தின் புனித தன்மையை பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் பலமுறை பொதுமக்களிடம் கோரியிருந்தனர். இந்நிலையில் குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு குறித்த அன்னை வேளாங்கன்னி சிலை விவமிகளால் எடுத்து செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 14 =

*