;
Athirady Tamil News

வித்தை காட்ட சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..!!

0

பதுரளிய, மாரகஹதெனி பாலத்தில் இருந்து மகுரு ஆற்றில் குதித்த நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று (07) மாலை 5 மணியளவில் மூன்று இளைஞர்கள் பாலத்தில் குதித்து நீராடிக்கொண்டிருந்த போதே அதில் ஒரு இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

ஹசிது சம்பத் எனும் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.​ை

பிரதேசவாசிகள் இணைந்து குறித்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட போதும், இரவாகும் வரையில் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இன்று காலை கொழும்பு கடற்படையின் சுழியோடிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியை ஆரம்பித்தனர்.

இருப்பினும் நீர்மட்டம் அதிகமாக இருக்கம் காரணத்தினால் சுழியோடிகளினால் குறித்த நபரை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 20 =

*