;
Athirady Tamil News

யாழில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!!

0

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலியல் ரீதியான தொல்லை விளைவித்தார் என்று கொட்டடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவர் யாழ்ப்பாண நகரில் நாட்டாமை வேலை பார்ப்பவர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், அவரை கடந்த புதன்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சந்தேகநபருக்கு எதிராக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மேலும் சில மாணவிகள் கடந்த வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை வழங்கினர். அதனடிப்படையில் அந்த மாணவிகளின் முறைப்பாடுகளை பொலிஸார் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்வைத்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 1 =

*