;
Athirady Tamil News

தமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்..!!

0

நாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டடத்தின் திறப்புவிழா இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

இன்று அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. நாங்கள் இந்த அரசாங்கத்தினை ஆதரிக்கின்றோம். சில முக்கியமான விடயங்களுக்கான நாங்கள் அந்த ஆதரவினை வழங்குகின்றோம்.

ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி இந்த அரசாங்கத்தினை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் ஒரு பாரிய பங்களிப்பு செய்தோம்.
ஓரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அதனை வழங்கினோம்.

இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தினை அமைத்ததன் காரணமாக தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். அதன் மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும். எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாகக் கருதப்படுவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 6 =

*