;
Athirady Tamil News

ஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

0

ஜேர்மனியில் 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 900 இளம் அகதிகள் எங்கு போனார்கள் என்பது அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக ஜேர்மன் குழந்தைகள் தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்ட நிலையில், காணாமல் போகும் 14 வயதுக்குட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாக ஜேர்மனியின் குழந்தைகள் நல கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

ஃபெடரல் குற்றவியல் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, ஜூலையில் 895 ஆக இருந்த காணாமல்போன இளம் அகதிகளின் எண்ணிக்கை, அக்டோபரில் 902 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் தலைவரான Holger Hofmann கூறும்போது, இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள், இளம் அகதிகளுக்கான தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Missing Children Europe என்னும் தொண்டு நிறுவனம், ஐரோப்பாவில் குற்றம் புரியும் கூட்டத்தார் இளம் அகதிகளை தாங்கள் இருக்கும் அரசு காப்பகங்களை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கிறது.

பல இளம் அகதிகள் கடத்தல் அல்லது பாலியல் தொழிலுக்காக கடத்தல், பிச்சையெடுக்க வைத்தல் அல்லது போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஏன் மற்றும் எப்படி குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்பதைக் குறித்த தகவல்கள் ஃபெடரல் குற்றவியல் அலுவலகத்தில் இல்லாதது, இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக ஜேர்மனியின் குழந்தைகள் நல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 7 =

*