;
Athirady Tamil News

யாழில் பட்டப்பகலில் யுவதி ஒருவர் கடத்தல்..!!

0

யாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − one =

*