;
Athirady Tamil News

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் 2017ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*