;
Athirady Tamil News

ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்..!!

0

ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*