;
Athirady Tamil News

அமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள் – அக். 18 -1867..!!

0

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18-ம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867-ல் ரஷ்யாவிடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது.

அலாஸ்கா நாள் மாநிலம் முழுவது கடைப்பிடிக்கப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது. 1908 – பெல்ஜியம் காங்கோவைக் கைப்பற்றியது. 1912 – முதலாம் பால்க்கான் போர் ஆரம்பமாகியது. 1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. 1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது. 1944 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய ராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை பிறந்தது. 1944 – சோவியத் ஒன்றியம் செக்கொசுலவாக்கியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*