;
Athirady Tamil News

அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு மார்ச் 02 ம் திகதியன்று..!!

0

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை மார்ச் 02 ம் திகதியன்று அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய கொழும்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் சய்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உரையாற்றியதாக முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், டாக்டர் அனுருத்த பாதெனிய நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக உத்தரவிட்டு தகுந்த தண்டனை வழங்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 2 =

*