;
Athirady Tamil News

யாழ். திருநெல்வேலியில் தனித்து வாழ்ந்த இளைஞன் மர்மான முறையில் மரணம்….!!

0

வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த இளைஞரொருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் திருமணம் செய்யாத நிலையில் மேற்படி பகுதி தனிமையில் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக குறித்த இளைஞரின் நடமாட்டத்தைக் காண முடியாமையாலும், மேற்படி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியமையாலும் சந்தேகமடைந்த அயற்பகுதி மக்கள் நேற்றைய தினம்(17) இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

பொதுமக்களின் தகவலுக்கமைய கோப்பாய்ப் பொலிஸார் குறித்த வீட்டைத் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது இளைஞரொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதே பகுதியைச் சேர்ந்த யேசுதாசன் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*